Publish Date: Thu, 31 Mar 2022 (09:08 IST)
Updated Date: Thu, 31 Mar 2022 (09:14 IST)
நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது
காலாவதியான பிறகும் கட்டணத்தை உயர்த்தியதற்கு லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு என்றும் இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வின்படி ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
siva
Publish Date: Thu, 31 Mar 2022 (09:08 IST)
Updated Date: Thu, 31 Mar 2022 (09:14 IST)