Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்?

Advertiesment
அதிமுக
, திங்கள், 14 ஜூன் 2021 (08:03 IST)
பரபரப்பான சூழ்நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிக்கு என்பது முடிவு செய்யப்படும் என தெரிகிறது 
 
மேலும் வரும் 21ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ளதை அடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? எந்தெந்த பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்ப வேண்டும்? என்பது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது
 
கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் போரில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று அதிமுக கூட்டம் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது: என்ன காரணம்?