Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது: என்ன காரணம்?

Advertiesment
அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது: என்ன காரணம்?
, திங்கள், 14 ஜூன் 2021 (07:57 IST)
அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி கைது: என்ன காரணம்?
பிரபல அரசியல் விமர்சகரான கிஷோர் கே ஸ்வாமி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்துக்களை பதிவு செய்து வருபவர் கிஷோர் கே ஸ்வாமி என்பதும் குறிப்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டதாக தெரிகிறது. மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் பொருத்தும் அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுஇதனை அடுத்து எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை கிஷோர் கே ஸ்வாமி கைதுசெய்யப்பட்டார் 
 
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்க்ள் உள்ளன என்பதும் அவரது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம்!