டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்க்கு பதில் அளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேட்டுப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த லட்சுமணக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் 10 நாட்களுக்குப் பிறகு உத்தேச வினா விடை வெளியிடப்பட்டது என்றும் அதில் ஆட்சேபம் இருந்ததால் ஏழு நாளில் டிஎன்பிஎஸ்சி க்கு ஆன்லைன் வழியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
19 கேள்விகளின் விடைகள் தவறாக இருந்ததை அடுத்து ஆன்லைன் வழியாக ஆதாரங்களுடன் டிஎன்பிஎஸ்சிக்கு தெரிவித்தபோதிலும் எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் சரியான உத்தேச வினா விடை வெளியிட்ட பிறகு தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இது குறித்து பதில் அளிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்