தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனம் ராயல் என்ஃபீல்டு அறிவித்துள்ளது தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன்னனி நிறுவனங்கள் கோடி கணக்கில் முதலீடு செய்து வருகின்றன என்பதும் அதனால் தமிழ்நாட்டில் தொழில் வளம் அதிகரித்து வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சுமார் 1000 கோடி மதிப்பில் இந்த ஆலை தமிழகத்தில் நிறுவ திட்டமிட்டு உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் உள்ள ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில் தற்போது எலக்ட்ரிக் பைக்குளையும் இந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது