சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் தங்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டின் செமஸ்டர் தேர்வுகள் மே மாதம் முடிவடைந்து விடும் என்று கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கையை அனுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்த பருவ தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் அச்சடிப்பு தாமதமே இந்த தள்ளிவைப்புக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. மே மாதம் 25ஆம் தேதி தொடங்கி ஜூன் இரண்டாம் வாரம் வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாத காலம் காலதாமதம் ஆகுவதை அடுத்து கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜூன் மாதம் இரண்டாவது வாரம் தேர்வு முடிவு அடைந்து அதன் பின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்பதால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தான் ரிசல்ட் வரும் என்றும் இதனால் தங்களது வேலை வாய்ப்பு தாமதமாகும் என்றும் மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த செமஸ்டர் தேர்வு தள்ளி வைக்கப்படுவதன் காரணமாக பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களின் உயர்கல்வி இடங்கள் பரிபோகு அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.