உணவு பொருட்களில் திரவ நைட்ரஜன் கலந்து விற்பனை செய்தால் 10 ஆண்டு சிறை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே கூறிய நிலையில் தற்போது மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் குழந்தைகள் உள்பட பலர் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பிஸ்கட், வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களுடன் ஹைட்ரஜனை நேரடியாக கலந்து விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சற்று முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறி திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்தால் பத்து லட்ச ரூபாய் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குழந்தைகளுக்கு திரவ நைட்ரஜன் கலந்த பிஸ்கட் மற்றும் பொருட்களை வாங்கி தர வேண்டாம் என பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.