Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம்.. தமிழக அரசு உத்தரவு..!

அரசுக்கு எதிராக போராடிய ஆசிரியர்களுக்கு சம்பள  பிடித்தம்.. தமிழக அரசு உத்தரவு..!

Mahendran

, சனி, 6 ஏப்ரல் 2024 (10:05 IST)
அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள  பிடித்தம் செய்ய உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சமவேலைக்கு சமஊதியம் கேட்டு பிப்ரவரி 19 முதல் மார்ச் 8 வரை போராட்டத்தில்  ஆசிரியர்கள்  ஈடுபட்டனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாட்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணி  பதிவேட்டில் பதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் சம்பளம் மட்டுமின்றி ஆசிரியர்களின் பிற பணப்பலன்களை ஒரே தவணையில் பிடித்தம்  செய்ய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முழுவதும் சம வேலைக்கு சம ஊதியம் என கோரிக்கை விடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இடைநிலை அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த போராட்டம் நடந்தது 
 
ஆனால் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் மட்டும் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த போராட்டம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கைவிடப்பட்ட நிலையில் போராடிய நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது என்று தான் ஆசிரியர்கள் நினைத்தார்கள் 
 
ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 19 நாட்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
தற்போது திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பிற பகுதிகளில் போராடியவர்களுக்கும் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக VS அமமுக VS அதிமுக... கடும் போட்டி..! தேனி தொகுதி யாருக்கு..!!