பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் சத்துணவு வழங்கப்படும்! – தமிழக அரசு!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:23 IST)
கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 1 முதல் 8 வகுப்புகள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12ம் வகுப்பு வரையிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளுடன் முட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments