Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - அரசு ஊழியர்கள் போர்க்கொடி (வீடியோ)

Advertiesment
எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் - அரசு ஊழியர்கள் போர்க்கொடி (வீடியோ)
, செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (13:12 IST)
கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசியர்களையும் கன்னியக்குறைவாக ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய கண்டன போராட்டம் நடைபெரும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாநில செயற்குழு கூட்டத்தில் ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுபிரமனியன் பேட்டியளித்துள்ளார்.


 
கரூர் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாநில செயற்குழு நடைபெற்றது. ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமனியன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். 
 
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”ஊராட்சி செயலாளர்களுக்கு கால ஊதியம் வழங்க வேண்டும், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி 10 நாட்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம் . வேலை நிறுத்தத்தின் முடிவில் துறை சார்ந்த செயலாளர்கள் அமைச்சர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கூடிய விரைவில் தங்களது கோரிக்கைக்கான ஆணைகளை வழங்குவதாக தெரிவித்தார்கள். 
 
இந்த பேச்சுவார்த்தை முடிவுற்று சுமார் ஒரு மாத காலமாகியும் இதுவரையில் எவ்வித அரசு ஆணையும் வழங்கப்படவில்லை குறிப்பாக தமிழ்நாட்டி 12524 ஊராட்சி செயலர்களுக்கு அமைச்சர் மற்றும் செயலாளர்கள் அழித்த வாக்குறுதியின்படி பதிவு எழுத்தர்களுக்கான ஊதியதிற்கான அரசு ஆணை விரைவில் வெளிட வேண்டும் அவ்வாறு வழங்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசணை செய்யப்படும். 
 
இதுவரையில் தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலேயே தற்போது உள்ள தமிழக முதல்வர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசு ஊழியர்களுக்கும் ஆசியர்களுக்கும் அதிக சம்பளம் அரசு கொடுக்கிறது அதைவிடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று கன்னியக்குறைவாக ஒருமையில் பேசியதாக வாட்ஸப்பில் வந்து கொண்டிருக்கிறது. 
 
இதுபோன்ற பேச்சு அரசு ஊழியர்களிடம் கடுமையான அதிருப்தியும் மன உளைச்சளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரையில் எந்த முதல்வரும் பேசாத வார்த்தைகளை இந்த முதல்வர் பேசியிருப்பது வன்மையாக கண்டனத்திற்குறியது என்றவர் அதுமட்டுமில்லாது ஜாக்டோ- ஜியோ சார்பில் முதல்வரின் கன்னியக்குறைவான பேச்சை கண்டித்து வரும் 9ம் தேதி தமிழகம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
 
பேட்டி – சுப்பிரமனியன் - ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்பாளர் 

-சி. ஆனந்தகுமார்

இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே க்ளிக் செய்யுங்கள்....


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீனவருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே மீன் 5.5 லட்சத்திற்கு ஏலம்