Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 ரன்களை கடந்து சராசரியை ஏற்றிக்கொள்வரா கோஹ்லி?

Advertiesment
1000 ரன்களை கடந்து சராசரியை ஏற்றிக்கொள்வரா கோஹ்லி?
, புதன், 1 ஆகஸ்ட் 2018 (16:29 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த சராசரியை வைத்திருக்கு கேப்டன் விராட் கோஹ்லி தற்போது நடைபெறும் தொடர் மூலம் சராசரியை ஏற்றிக்கொள்வார் என்று எல்லோராலும் பெரிதும் நம்பப்படுகிறது.

 
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 
கடந்த முறை தோனி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது விராட் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவரது சராசரி 13.40 மட்டுமே.
 
இந்த முறை அவர் கண்டிப்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
 
இந்த டெஸ்ட் தொடரில் கேப்டன் விராட் கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் விராட் கோஹ்லி இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 977 ரன்கள் எடுத்துள்ளார். 1000 ரன்களை கடந்து சாதனை பட்டியலில் இடம்பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக பேட்மிண்டன் போட்டி - இந்திய வீரர் ஸ்ரீகாந்த் போராடி வெற்றி