ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுதலை: தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (11:39 IST)
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. 
 
ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது 'பேரவை நடைபெற்றுவரும் நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் விடுப்பை பேரவையில் அறிவிக்காதது ஏன்? என்றும் இந்த தகவலை செய்தி வெளியீடாக அறிவித்துள்ளது மரபுதானா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிக்கையில், 'உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கவர்னருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த 67 பேர்களை விடுதலை செய்வதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. விடுதலை செய்யப்படும் 67 பேர்கள் கொண்ட பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments