புழல் சிறையில் இருந்த ஒரு கைதிக்கு குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் அந்த கைதியை புழல் சிறை காவலர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் சிறைக்காவலரர்டாக பணிபுரிந்து வருபவர் பிரதீப். தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவி என்ற கைதிக்கு குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்ட ஆணை இவருக்கு வந்தது. இந்த ஆணையை விடுதலை ஆணை என தவறாக கருதிய காவலர் பிரதீப் ரவி என்ற கைதியை விடுவித்தார்.
இதன்பின்னர் தான் இவர்தனது தவறை உணர்ந்தார். இதுகுறித்த தகவல் மேலதிகாரிக்கு சென்ற நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சிறைதுறை மேலதிகாரிகள், காவலர் பிரதீப்பை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர். தற்போது விடுதலை செய்த ரவி என்ற கைதியை மீண்டும் கைது செய்யும் முயற்சியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.