Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுயேட்சையே இல்லாத தொகுதி.. சுயேட்சைகளால் நிரம்பிய தொகுதி! – கலகலக்கும் தேர்தல்!

Advertiesment
Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களும் தேர்தலில் களம் காண்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலேயே அதிகமான வேட்பாளர்கள் கொண்ட தொகுதியாக கரூர் உள்ளது. கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதேசமயம் மிகவும் குறைவான வேட்பாளர்களை கொண்ட தொகுதிகளாக வால்பாறை மற்றும் பவானிசாகர் உள்ளது. இந்த தொகுதிகளில் 6 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அதேசமயம் பவானிசாகரில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வார்டிற்குள் சென்ற ஒரே அமைச்சர் நான்! – விஜயபாஸ்கர் பிரச்சாரம்!