தமிழக சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளை தான் விசாரித்ததாக கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவருக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள், அவரின் 9 வயது மகள் அவருக்காக பிரச்சாரம் செய்தது போன்றவை அடிக்கடி வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “நான் பத்தாண்டு காலம் விராலிமலை தொகுதிக்காகவும் மக்களுக்காகவும் உழைத்துள்ளேன். இந்த பகுதி மக்களுக்கு நான் எந்த வித தீங்கையும் செய்யவில்லை. இலுப்பூர் தெரு வீதிகளில் செல்லும்போது ஓட்டுனரை ஹாரன் அடிக்காமல் மெதுவாகதான் போக சொல்லுவேன். கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளை கொரோனா வார்டிற்குள்ளேயே சென்று பார்த்து விசாரித்த ஒரே அமைச்சர் நான். என்னை மீண்டும் வெற்றி பெற செய்தால் இந்த தொகுதி மக்கள் நலன்களுக்காக பாடுபடுவேன்” என கூறியுள்ளார்.