Publish Date: Wed, 31 Mar 2021 (06:44 IST)
Updated Date: Wed, 31 Mar 2021 (06:45 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் சுறுசுறுப்பாக எடுத்து வருகிறது
இந்த நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கூட்டணி என ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேர்தல் பணியில் இருக்கும் அதிகாரிகள் காவல்துறையினர் ஆகியோர்களுக்கு தபால் வாக்கு பதிவுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு செய்துள்ளார்
இதனை அடுத்து இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகும் தபால் வாக்குகள் மற்றும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச்சாவடியில் பதிவாகும் வாக்குகல் மே இரண்டாம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
siva
Publish Date: Wed, 31 Mar 2021 (06:44 IST)
Updated Date: Wed, 31 Mar 2021 (06:45 IST)