Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு முதல்வர் விருது!

Advertiesment
திருடர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு முதல்வர் விருது!
, புதன், 14 ஆகஸ்ட் 2019 (13:41 IST)
சமீபத்தில் நெல்லை அருகே கடையம் என்ற பகுதியில் சண்முகவேல்-செந்தாமரை என்ற தம்பதியினர் தனியாக இருந்தபோது திடீரென முகமூடி அணிந்த இரண்டு திருடர்கள் அவர்களை சரமாரியாக தாக்கினர். ஆனால் சில நொடிகளில் சுதாரித்துக் கொண்ட அந்த முதிய தம்பதிகள் திருப்பி தாக்கியதில் நிலைகுலைந்து போன அந்தத் திருடர்கள் வேறுவழியின்றி புறமுதுகிட்டு தப்பி ஓடிவிட்டனர் 
 
இதுகுறித்த சிசிவிடி வீடியோ காட்சி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் வைரலாகி சண்முகவேல்-செந்தாமரை தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. குறிப்பாக அமிதாப்பச்சன், ஹர்பஜன் சிங் உள்பட பல பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் இந்த  முதிய தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
 
இந்த நிலையில் நெல்லை முதிய தம்பதிகளின் வீரதீர செயல்களைப் பாராட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் வீரதீர விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தம்பதிக்கு வழங்கப்படும் இந்த விருதால் இதேபோல் மற்றவர்களும் வீரமாக செயல்பட வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.18,000 ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 ஆஃபர்: அள்ளிக்கொடுக்கும் ஜியோ!!