Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனு கொடுக்க நின்ற பெண்; காரை நிறுத்திய மு.க.ஸ்டாலின்! – கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Advertiesment
மனு கொடுக்க நின்ற பெண்; காரை நிறுத்திய மு.க.ஸ்டாலின்! – கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!
, வெள்ளி, 21 மே 2021 (13:54 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள முதல்வர் காரை நிறுத்தி பெண் ஒருவரை அழைத்த சம்பவம் கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

இதன் முதற்கட்டமாக திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார். கோவை கொடிசியா வளாகம், குமரகுரு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

குமரகுரு கல்லூரியில் ஆய்வு முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டபோது கல்லூரிக்கு வெளியே வீதியில் குடும்பத்துடன் பெண் ஒருவர் மனுவை வைத்துக் கொண்டு நின்றுள்ளார். அதை பார்த்ததும் உடனடியாக வாகனத்தை நிறுத்த சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணை அழைத்து அவரிடம் குறைகளை கேட்டுக் கொண்டு மனுவையும் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை! – தமிழகத்தில் கனமழை வாய்ப்பு!