Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தவறாக நடக்க முயன்றவரை கொன்ற பெண்! – விடுதலை அளித்த திருவள்ளூர் டி.எஸ்.பி!

Advertiesment
தவறாக நடக்க முயன்றவரை கொன்ற பெண்! – விடுதலை அளித்த திருவள்ளூர் டி.எஸ்.பி!
, புதன், 6 ஜனவரி 2021 (13:55 IST)
திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை கொன்ற பெண் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கௌதமி. சமீபத்தில் இவர் இயற்கை உபாதையை கழிக்க சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த அவரது உறவினர் அஜித்குமார் என்ற நபர் கத்தியை காட்டி மிரட்டி அவரை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அஜித் குமாரின் கத்தியை பிடுங்கி அவரையே தாக்கியுள்ளார். இதனால் நிலை குலைந்த அஜித் குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து கத்தியுடன் தானே காவல் நிலையம் சென்ற கௌதமி நடந்த உண்மைகளை கூறி சரண் அடைந்துள்ளார். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு அஜித்தை கொல்லும் நோக்கம் இல்லையென்றும், தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலால் அஜித் இறந்ததாகவும் தெரிய வந்ததை தொடர்ந்து கௌதமி மீது இந்திய தண்டனைசட்டம் 302ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஐபிசி பிரிவு 100 ஆக மாற்றி விடுதலை செய்யபட்டுள்ளார்.

இதுகுறித்த இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை!!