Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாலிவுட் படங்களில் முதலீடு செய்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா!

Advertiesment
ஹாலிவுட் படங்களில் முதலீடு செய்த அலிபாபா நிறுவனர் ஜாக் மா!
, புதன், 6 ஜனவரி 2021 (12:50 IST)
அலிபாபா நிறுவனத்தின் இணை இயக்குனர் ஜாக் மா ஹாலிவுட் படங்களில் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து விலகினார். கடந்த 90 களின் இறுதியில் ஒரு ஆங்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜாக் மா, தன் நண்பர்களுடன் இணைந்து, அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நண்பர்கள் இவரை விட்டு ஓடினாலும் தம் உறுதியில் விடாப்பிடியாய் நின்று, இன்று ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரையும், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் ராஜாவாகவும் திகழ்கிறார். சீன நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபருபவரும் ஜாக்மா தான்.

இந்நிலையில் மூன்று மாதங்களாக இவரைக் காணவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சீனாவின் ஜாக் மா சீனப் படங்களில் முதலீடு செய்தது போலவே அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களிலும் கடந்த  5 ஆண்டுகளாக முதலீடு செய்துள்ளாராம். முதல் முதலாக 2015 ஆம் ஆண்டு மிஷன் இம்பாசிபிள் படத்தில் முதலீடு செய்த அவர் கடந்த ஆண்டு வெளியான 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917 ஆகிய படம் வரை பல படங்களில் முதலீடு செய்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடியால் தனது கேரியரை இழந்தாரா? ரசிகரின் கமெண்ட்டால் கடுப்பான மாதவன்!