Publish Date: Wed, 06 Jan 2021 (11:26 IST)
Updated Date: Wed, 06 Jan 2021 (11:28 IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருளானந்தத்தை அதிமுகவை விட்டு நீக்கியதாக அதிமுக அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவையே ஸ்தம்பிக்க செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொள்ளாச்சி அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்தை அவரது தவறான நடவடிக்கைகளுக்காகவும், கட்சியின் பெயரை களங்கபடுத்தியதற்காகவும் கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலக்குவதாகவும், அவரோடு அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.