திருப்பூர் அருகே காட்டுயானையை தாக்கி துன்புறுத்திய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. யானைகளை துன்புறுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என விலங்குகள் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் திருமூர்த்தி அணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளம் காட்டு யானை ஒன்றை இளைஞர்கள் சிலர் சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்த வனத்துறையினர் யானையை தாக்கிய காளிமுத்து, செல்வம், அருண்குமார் ஆகிய மலைவாழ் பழங்குடி இன இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.