Publish Date: Thu, 06 May 2021 (11:59 IST)
Updated Date: Thu, 06 May 2021 (12:06 IST)
ஸ்டாலினோடு பதவி ஏற்க உள்ள திமுக அமைச்சர்களின் பட்டியல் இன்று மதியம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 7ம் தேதி ஆளுனர் மாளிகையில் எளிமையான முறையில் முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த நிலையில் திமுக அமைச்சரவை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அந்த பட்டியல் வெளியாகாமல் இருந்த நிலையில் இன்று மதியம் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.