Publish Date: Thu, 06 May 2021 (10:49 IST)
Updated Date: Thu, 06 May 2021 (10:50 IST)
தமிழகத்தில் கொரோனா பரவல் வீரியமடைந்துள்ள நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என அரசிற்கு சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதம் முதலாக அதிகரிக்க தொடங்கிய நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகி வருகின்றன. முன்னதாக இருமுறை கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்!” என கேட்டுக் கொண்டுள்ளார்.