50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

Siva
ஞாயிறு, 20 ஜூலை 2025 (08:35 IST)
திருச்செந்தூரில் உள்ள வள்ளி குகை, சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் வள்ளி குகைக்கு சென்று தரிசிப்பது வழக்கம்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு, HCL நிறுவனத்தின் ரூ.200 கோடி மற்றும் தமிழக அரசின் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் திருக்கோயில் முழுவதும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளின் ஒரு பகுதியாக வள்ளி குகையும் புதுப்பிக்கப்பட்டது.
 
கடந்த ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றதை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட வள்ளி குகையிலும் தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குகையின் உள்ளே, வள்ளி முருகன் புராணத்தை சித்தரிக்கும் ஓவியங்கள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு பிறகு வள்ளி குகை சீரமைக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த குகைக்குச் சென்று வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

நடிகை கரீஷ்மா கபூரின் குழந்தைகளின் வழக்கு: நாடகத்தைத் தவிர்க்க உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

ஸ்கேன் செய்ய வந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மருத்துவர் தலைமறைவு ..

செங்கோட்டை குண்டுவெடிப்பு.. மருத்துவர் மட்டுமல்ல, எம்பிபிஎஸ் மாணவரும் கைது ..!

அடுத்த கட்டுரையில்
Show comments