Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

Advertiesment
திருச்செந்தூர்

Siva

, ஞாயிறு, 6 ஜூலை 2025 (08:07 IST)
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை  நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார்.
 
பொதுவாக, பெரும்பாலான திருக்கோவில்களில் கும்பாபிஷேகத்திற்குப் பிறகுதான் மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறும். ஆனால், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒரு தனித்துவமான மரபாக, கும்பாபிஷேகம் நடந்த பின்னரே மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
 
இந்தச் சிறப்பு வாய்ந்த மரபைக் கருத்தில் கொண்டுதான், பக்தர்கள் இன்று நண்பகல் 12 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
 
மேலும், கும்பாபிஷேக நிகழ்வை அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தெளிவாக காணும் வகையில், கோவில் வளாகத்தை சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் பெரிய எல்இடி திரைகள் நிறுவப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்