Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்டணம் வசூலிக்க கால அவகாசம், மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

Advertiesment
கட்டணம் வசூலிக்க கால அவகாசம், மீறும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (16:06 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு வந்துவிட்ட போதிலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. இருப்பினும் பள்ளி கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என்றும் திரையரங்குகள் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஒரு சில மாதங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனை பயன்படுத்தி பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
ஏற்கனவே தமிழக அரசும் நீதிமன்றமும் 40 சதவீதத்துக்கு மேல் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருக்கும் நிலையில் பல தனியார் பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் பட்டியலை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வோடபோன் ஐடியா ஆனது “வீ” – இனியாவது நல்ல காலம் பிறக்குமா?