Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வோடபோன் ஐடியா ஆனது “வீ” – இனியாவது நல்ல காலம் பிறக்குமா?

Advertiesment
வோடபோன் ஐடியா ஆனது “வீ” – இனியாவது நல்ல காலம் பிறக்குமா?
, திங்கள், 7 செப்டம்பர் 2020 (15:43 IST)
இந்தியாவின் முக்கிய நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா தனது நிறுவனத்தின் பெயரையும், லோகோவையும் மாற்றியுள்ளது.

இந்திய நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக இயங்கி வந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018ம் ஆண்டு ஒன்றாக இணைந்தன. அதன்பிறகு வோடபோன் ஐடியா என்ற பெயரிலேயே இயங்கி வந்த நிலையில் தொழில் போட்டியின் காரணமாக பலத்த பின்னடைவை சந்தித்தது இந்நிறுவனம்.

இந்நிலையில் வோடபோன் ஐடியா என்ற பெயரை சுருக்கு “வீ” என்ற புதிய பெயருடன், புதிய லோகோவுடன் மீண்டும் களம் இறங்குகிறது இந்நிறுவனம். இதுகுறித்து பேசியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்தின் செயல் அதிகாரி ரவீந்தர் தாக்கர் ”இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு துல்லியமாக டிஜிட்டல் சேவை இணைப்பு வசதியை அளிப்பதில் வீ கவனம் செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 DAYS FREE TRIAL!! புது ரூட்டில் ஜியோ!!