மழையால் பாதிக்கப்படுபவர்கள் கேப்டன் ஆலயத்தில் தங்கலாம்! - பிரேமலதா விஜயகாந்த அறிவிப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:14 IST)

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மழையால் பாதிக்கப்படும் மக்கள் தேமுதிக அலுவலகத்தில் (கேப்டன் ஆலயம்) தங்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக கனமழை பெய்யத் தொடங்கிய நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கனமழையால் வீடுகளில் வசிக்க முடியாத மக்கள், உதவி தேவைப்படுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை (கேப்டன் ஆலயம்) தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

மக்களவையில் SIR விவாதம்.. நாளை ராகுல் காந்தி பேச்சில் அனல் பறக்குமா?

50 காசு நாணயம் செல்லுமா? இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments