Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்சிக்கும் நிர்வாகிகளுக்கும்துணை நின்று ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

Advertiesment
Premalatha Vijayakanth

J.Durai

, வியாழன், 5 செப்டம்பர் 2024 (21:22 IST)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தே.மு.தி.க சார்பாக விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சி துவக்க நாள் விழா பத்மபூஷன் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் நடைபெற்றது.
 
இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார்.
 
இந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். 
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்த மதுரை மண் நான் புகுந்த வீடு, புகுந்த வீட்டிற்கு தற்போது 
வந்துள்ளேன்.
 
விஜயகாந்த் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். 
 
அந்த வகையில் சிறு நிகழ்ச்சியோ பொதுக் கூட்டமோ, மாநாடோ.
கட்சிகொடிநாள், பிறந்தநாள் என்று எந்த நாள் ஆனாலும் குறைந்தது நூறு குடும்பத்திற்காவது உதவிகள் சென்று சேர வேண்டும் என்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
 
அவர் நம்முடன் தான் இருக்கிறார் எங்கும் செல்லவில் லை நம்முடன் உயிர்மூச்சாக கலந்து மனிதராக பிறந்து புனிதராக இருந்து தெய்வமாக நம்முடன் வாழ்ந்து வருகிறார். தமிழக மக்களுக்காகவே அவர் வாழ்ந்தார் 
மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறி உள்ளாட்சி தேர்தலின் போது இதே இடத்தில் கேப்டன் பிரச்சாரம் செய்தார்.
 
தமிழகத்தில் அவரது கால்படாத இடமே இல்லை. எல்லா ஊருக்கும் சென்றுள்ளார் நானும் வந்துள்ளேன்.அவர் பேசிய பேச்சுக்கள் மூச்சுக்காற்று இந்த காற்றில் கலந்துவிட்டது.
சென்னைக்கு எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் கேப்டன் கோயிலுக்கு நான் அழைக்கிறேன்.
 
உங்கள் அனைவரையும் அன்பாக வரவேற்று உபசரித்து உணவளித் து பாதுகாப்பாக ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்.  என்றைக்கும் கேப்டனுக்கு துணைநில்லுங்கள் எப்பொழுதும் கட்சிக்கும் நிர்வாகிகளுக்கும் துணை நின்று ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 
 
நமது முரசு வெற்றி முரசாக எட்டுத்திக்கும் ஒலிக்கும் என்று கூறி விடை பெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசிரியர் தினவிழா கொண்டாடிய மாணவர்கள்!