Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: திருச்சி மாவட்ட மக்களுக்கான கட்டணமில்லா உதவி எண்கள் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:13 IST)
திருச்சி மாவட்ட மக்களுக்கான கட்டணமில்லா உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களும், இளைஞர்களும் நீர் நிலைகளின் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை, ஊரக வளர்ச்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைதுறை ஆகிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு 24-மணி நேர மாவட்ட கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இக்கட்டுபாட்டு அறையின் 1077, மற்றும் 0431-2418995 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பலாம். மேலும், வட்ட அலுலகங்களிலும் 24 மணி நேர கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறைகளுக்கோ, அல்லது வட்டாட்சியர்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புயல், மழை, வெள்ளம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

தற்போது பரவாலாக மழை பெய்து வருவதால் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குழந்தைகளை செல்லாத வண்ணம் கவனமாக இருக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைவெள்ளம், நீர்நிலைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை முன்கூட்டியே எளிதாக பொதுமக்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்கு வண்ணம் டி.என்.அலர்ட் (TN-ALERT -Mobile App) என்ற செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த TN- ALERT செயலியை 'Google Play Store" மற்றும் "105 App Store"-ல் இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த செயலியின் மூலம் மழை, வெள்ளம் தொடர்பான புகார்கள் தெரிவித்தால் மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

உதவி எண்கள் குறித்த விபரங்கள் இதோ:

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை நீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்! பொதுமக்கள் கடும் அவதி..!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல் தேதி எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மாநகரப் பேருந்து தகரம் பெயர்ந்து தொங்கிய சம்பவம்.. சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சஸ்பெண்ட்

சரணடையுங்கள் அல்லது பட்டினியில் சாவுங்க! இஸ்ரேல் நடத்தப்போகும் மனிதாபிமானமற்ற தாக்குதல்?

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments