சென்னையில் 95 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த 2022ம் ஆண்டு முதலாக நடந்து வரும் நிலையில் பல பகுதிகளில் வடிகால் பணிகள் முழுவதும் முடிந்துவிட்டதாகவும், சில இடங்களில் முடியும் தருவாயில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் மழைநீர் வடிகால் பணிகள் மொத்தமாக 95 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்திருந்தால் சந்தோஷம்தான். ஆனால் நிலவரம் அப்படியில்லை. மழைக்காலம் வருவதற்கு முன்னதாக அனைத்து சாலைகளையும் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. பல ஆண்டுகளாக சென்னையில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
தவறான தகவல்களை சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் அனைத்தையும் அரசு சரிசெய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K