Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம் கருத்து!

Advertiesment
துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு - நீதிமன்றம் கருத்து!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (15:07 IST)
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து  இந்த வழக்கை விசாரித்து புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
 
அதன் பின்னர் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியலில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அத்தோடு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம்!