Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனிமேலாவது ஊர் பெயரை சரியா எழுதலாம்! – திருமாவளவன் பாராட்டு!

Advertiesment
இனிமேலாவது ஊர் பெயரை சரியா எழுதலாம்! – திருமாவளவன் பாராட்டு!
, வியாழன், 11 ஜூன் 2020 (08:22 IST)
தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்திலும் தமிழக ஊர்கள், மாவட்டங்கள் பெயரை எழுத வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிற்கு திருமாவளவன் அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல ஊர்கள் மற்றும் மாவட்டங்கள் பெயர் நல்ல தமிழிலேயே இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் சொல்லாடல் சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இந்நிலையில் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயரை இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர் பலகைகளிலும் மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் தொல்.திருமாவளவன் “இது வரவேற்கத் தக்கது. தமிழக அரசுக்கு எமது பாராட்டுகள். நன்றி. ADAYAR( அடையார்) என எழுதுவதை இனியாவது ADAIYAARU (அடையாறு)எனவும் PALAR(பாலார்) என எழுதுவதை PAALAARU( பாலாறு) எனவும் எழுதட்டும். Portonovo என்பதை PARANGIPETTAI (பரங்கிப்பேட்டை) என்றே ஆங்கிலத்திலும் எழுதட்டும்.” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்காலத்தில் கொரோனாவால் என்ன நடக்கும்? – மருத்துவ பத்திரிக்கை அதிர்ச்சி தகவல்!