தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :
மத்திய வங்கக்கடல் மற்றும் வடதமிழகம் ஆந்திரா ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில் மேகம் மூட்டத்துடன் காணப்படும் எனவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.