Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப அட்டை மூலமாக 13 கோடி இலவச முகக்கவசங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

Advertiesment
குடும்ப அட்டை மூலமாக 13 கோடி இலவச முகக்கவசங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!
, வியாழன், 11 ஜூன் 2020 (06:55 IST)
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்காக குடும்ப அட்டை மூலமாக விலையில்லா முகக்கவசங்களை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி குடும்ப அட்டைகள் மூலமாக 13.08 முகக்கவசங்கள் அளிக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் இந்துக்கள் வீடு இடிப்பு: மத பிரச்சனையா? சட்ட நடவடிக்கையா?