Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம்! கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

Siva
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (07:44 IST)
இன்று மாலை திருவண்ணாமலையில்  மகா தீபம் ஏற்றப்படுவதை அடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதாகவும், இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நான்காம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நிலையில், இன்று பத்தாவது நாள் விழாவான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 14,000 அதிகமான போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மகா தீபத்தை ஒட்டி இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை பல பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் கூட்டணிக்கு வைகோ வந்தால் அவருக்கு எம்பி பதவி உறுதி: மத்திய அமைச்சர்

சின்னசாமி மைதான சோகம்: நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் காதணிகள் மாயம்: பெற்றோர் பகீர் குற்றச்சாட்டு!

குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற குன்றத்தூர் அபிராமி! - தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு!

தமிழக மருத்துவமனைகளில் சிறுநீரக கடத்தல்.. திமுகவினருக்கு தொடர்பு: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.. விட மாட்டோம்.. தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments