திருவண்ணாமலை தீபத் திருவிழா வரும் 13ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சற்று முன் தெரிவித்துள்ளார் ஆனால் அதே நேரத்தில் கார்த்திகை தீப திருவிழாவில் மழையின் உச்சியில் பரணி தீபம் ஏற்றுவதற்காக மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மலையில் திடீரென சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு குழு தெரிவித்தது. இதன் காரணமாக பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டாம் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியதை அடுத்து தற்போது தமிழக அரசின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் பக்தர்கள் அதிருப்தியில் இருந்தாலும் தமிழக அரசு தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.