Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்! பக்தர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது! - காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகள்!

Advertiesment
Tiruvannamalai

Prasanth Karthick

, செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:22 IST)

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபமும், கிரிவலமும் நடைபெற உள்ள நிலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.



 

திருவண்ணாமலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி கிரிவலமும் நடைபெறும் என்பதால் திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், ஆசிர்வதித்தல் என்ற பெயரில் ஏமாற்றி, மிரட்டி பணம் பறிப்பது சட்டப்படி குற்றமாகும்.

 

கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் கிரிவலப்பாதையில் உலவ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

 

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவது, மலை ஏறுவது குற்றம். அப்படி செய்ய முயன்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

 

கிரிவலப்பாதையில் கடைகள் அமைத்தோ, தங்கியோ சிலிண்டர் பயன்படுத்தி சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டநடவடிக்கை

 

மகாதீபத்திற்கு வரக் கூடிய வாடகை பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களை தவிர வேறு எங்காவது நிறுத்தினால் அவை அப்புறப்படுத்தப்படும்.

 

திருவண்ணாமலை வரும் பக்தர்கள் 9363622330 என்ற எண்ணுக்கு ஹலோ என வாட்ஸப் குறுஞ்செய்தி அனுப்பினால் தற்காலிக பேருந்து நிலையத்தின் கூகிள் மேப்பினை பெறலாம்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!