காலிஸ்தான் ஆதரவு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரை அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு டிரம்ப் நியமனம் செய்திருப்பது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா நீதித்துறையின் உயர் பதவியான அட்டர்னி ஜெனரல் பதவிக்கு காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்மீத் தில்லான் என்பவரை நியமித்து டொனால்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அடுத்த மாதம் 20ஆம் தேதி அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப், அமைச்சரவையில் இடம்பெற்ற சில முக்கிய பிரமுகர்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிலருக்கும் ஏற்கனவே பதவி கிடைத்துள்ள நிலையில், தற்போது உதவி அட்டர்னி ஜெனரலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்மீத் தில்லான் என்பவரை டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இவர் காலிஸ்தான் ஆதரவாளர் என்பதால் இந்தியா அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது.
சீக்கிய மத சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினரான ஹர்மித், அமெரிக்க நீதித்துறையில் பாதுகாப்பாளராக இருப்பார் என்று நம்பிக்கை கொள்வதாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்த ஹர்மீத் சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு சென்றவர் என்பதும் அங்கேயே படித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலிஸ்தான் ஆதரவாளருக்கு உயர் பதவி கிடைத்ததால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.