Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Advertiesment
Murugan Temple iPhone

Prasanth Karthick

, வியாழன், 9 ஜனவரி 2025 (11:21 IST)

திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் பக்தரின் ஐஃபோன் விழுந்த சம்பவத்தில் அந்த ஃபோனை பக்தரே மீண்டும் ஏலத்தில் எடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்ற தினேஷ் என்பவர், உண்டியலில் காணிக்கை செலுத்தும்போது அவரது ஐஃபோனை உண்டியலில் தவற விட்டுள்ளார். ஆனால் உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம் என நிர்வாகம் கூறிவிட்டதாக வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த செய்தி வைரலான நிலையில் ஐஃபோனை உரியவரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். உண்டியலில் விழுந்த பொருட்கள், சாமி வஸ்திரங்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விடுவதே வழக்கம் என்பதால் அந்த ஐஃபோனும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

 

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஐஃபோன் உரிமையாளர் தினேஷ் ரூ.10 ஆயிரத்திற்கு தனது ஐஃபோனை தானே ஏலத்தில் எடுத்துள்ளார். இதை அமைச்சர் சேகர்பாபு உறுதி செய்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!