Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

bomb threat

Mahendran

, வியாழன், 9 ஜனவரி 2025 (10:57 IST)
தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் 1000 ரூபாய் இல்லை என்ற ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
நெல்லை மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டையில் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வரும் நிலையில், திடீரென ஒருவர் போன் செய்து கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
 
இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் மூலம் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் சோதனை செய்தனர்.
 
மோப்பநாய் மூலம் சோதனை செய்த நிலையில் எந்த ஆபத்தான பொருளும் சிக்கவில்லை என்பதால் வழக்கம் போல் மிரட்டல் அழைப்பு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, மிரட்டல் வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில் அதே பகுதியில் உள்ள அப்துல் ரகுமான் என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பதை கண்டுபிடித்தார்.
 
இதனை அடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஆயிரம் ரூபாயை கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது பொங்கல் பரிசு தொகை ரூ.1000 இல்லை ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
 
இதனை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!