Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’குளத்துல கூட தாமரை மலரக்கூடாது’! ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சேகர் பாபு உத்தரவு!

Sekar Babu

Prasanth Karthick

, புதன், 6 நவம்பர் 2024 (12:56 IST)

சென்னையில் உள்ள பசுமை பூங்காவை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு குளத்தில் பூத்திருந்த தாமரை மலர்களை அகற்ற சொல்லி பேசியுள்ளார்.

 

 

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே அவ்வப்போது முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு, பாஜகவினர் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என கூறி வரும் நிலையில், ‘தாமரை மலராது’ என திமுகவினர் பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில் சென்னை போரூரில் அமைக்கப்பட்டு வரும் பசுமை பூங்காவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்ய சென்றார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த பசுமை பூங்காவில் 100 இருக்கைகள், நடைபாதை, கூலாங்கல் பாதை, விளையாட்டு, உடற்பயிற்சி மைதானம், 6 ஏக்கரில் சிறிய ஏரி, பார்க்கிங், கழிப்பிடம், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

 

பூங்கா கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, அங்கு குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை சுட்டிக்காட்டி அகற்றக் கூறியதோடு, ‘குளத்தில் கூட தாமரை மலரக்கூடாது’ என அதிகாரிகளிடம் நகைச்சுவையுடன் கூறி சென்றுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே வாரத்தில் பிறந்த 9 இரட்டையர்கள்.. அனைவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண்..ஆச்சரிய தகவல்..!