Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தை பணியில் சுனக்கம்? எகிறும் விலையால் சிரமத்தில் மக்கள்!!

Advertiesment
சந்தை பணியில் சுனக்கம்? எகிறும் விலையால் சிரமத்தில் மக்கள்!!
, வியாழன், 7 மே 2020 (09:45 IST)
திருமழிசையில் மே 10 ஆம் தேதிக்குப் பிறகே காய்கறி சந்தை செயல்பாட்டிற்கு வரும் என வியாபாரிகள் கூட்டமைப்பு தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் இரண்டாயிரத்தையும் தாண்டியுள்ளது.
 
நேற்று ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
webdunia
திருமழிசையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த பகுதியில் கடைகள் வரும் என தெரிகிறது.  முதற்கட்டமாக இங்கு 100 கடைகள் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது.  
 
ஒவ்வொரு கடையும் 200 சதுர அடியில் அமைக்கப்படுகிறது, மேலும் ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 5 அடி இடைவெளி விடப்படுகிறது. இந்த பணி முந்து இன்று முதல் சந்தை நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் 10 ஆம் தேதி முதல் சந்தை செயல்பட துவங்கும் என வியாபாரிகள் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு முடிந்து 50% பேருந்துகள் இயங்கும்! – போக்குவரத்து துறை சுற்றறிக்கை!