திருமாவளவன் சிபிஎஸ்இ பள்ளியை நடத்தி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், "நான் எந்த ஒரு சிபிஎஸ்இ பள்ளியையும் நடத்தவில்லை," என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியபோது, "நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. அந்த பள்ளி நடத்தப்படும் இடம் எங்களுடையதுதான், அதனால் என் பெயரை அந்த பள்ளிக்கு பயன்படுத்தினார்கள். இன்னும் அந்த பள்ளி செயல்படவே இல்லை. ஒரே ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக அண்ணாமலை கூறுகிறார்.
அரசியல் பரபரப்புக்காக அண்ணாமலை தினமும் எதையாவது பேசி வருகிறார். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில் அளித்த நிலையில், இதற்கு அண்ணாமலை மீண்டும் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.