Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Advertiesment
அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Mahendran

, வியாழன், 20 பிப்ரவரி 2025 (16:19 IST)
பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியது அநாகரிகத்தின் உச்சம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் மற்றும் துணை முதல்வரை தமிழக பாஜக தலைவர் ஒருமையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் கூறியிருப்பதாவதுள்
 
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அண்ணாமலை தொடர்ந்து ஒருமையில் பேசுவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம். அவர் நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிலைக் கண்ணாடி முன்நின்றால் தன்னுடைய தற்குறித்தனங்கள் ஒவ்வொன்றாய் வரிசைக்கட்டி நிற்கும். 
 
கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அரசியல் செய்து வரும் அண்ணாமலைக்கு திராவிட மாடல் பற்றி பேசத் தகுதியில்லை.  .இதையும் படிக்க | சுகாதார நிலையங்களில் மூத்த மருத்துவர்கள் 24*7 பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்.நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு. மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என அனைத்திலும், தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகள் அளவின்றி போய்கொண்டிருக்கிறது. 
 
திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லி ஷூ போட்டுகொண்டு வலம் வருவது, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் கண்டு நாடே எள்ளி நகையாடுகிறது.அண்ணாமலை ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பது நிதர்சனம்" என்று குறிப்பிட்டுள்ளார். 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!