இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் ஆட்டத்தில், வங்கதேச அணி முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து தத்தளித்தாலும் அதன் பின்னர் சுதாரித்து விளையாடியது. இறுதியில், 49 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 229 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், அதே நேரத்தில் வங்கதேச அணியின் ஹிருடாய் என்பவர் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக ஜாக்கர் அலி என்பவர் விளையாடி 68 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, ஷமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளையும், ராணா மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
இந்த நிலையில், இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி 229 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.