தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசு , குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்று நடிகர் விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் V.K. புதூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சங்குன்றம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் சுமார் 200 குழந்தைகள் கோவிலிலும், கல்யாண மண்டபத்திலும் கல்வி கற்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள், அதிநவீன பார்கள், டெட்ரா பேக்குகளில் மது விற்பனை, வெளிநாட்டு மதுபானங்களுக்கான விலையை உயர்த்துவது என டாஸ்மாக் விற்பனையிலும் தமிழகத்தை போதை மாநிலமாக மாற்றுவதிலும் மும்முரம் காட்டும் தமிழக அரசு, பள்ளி குழந்தைகளின் கல்வி விவகாரத்தில் மெத்தனம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பல்வேறு பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றிய திமுக அரசு, குழந்தைகளின் படிப்பு விவகாரத்தில் உரிய தீர்வு காண வேண்டுமென தே.மு.தி.க சார்பில் வலியறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.