Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்!

Advertiesment
karur
, புதன், 17 மே 2023 (14:49 IST)
கரூர் மாவட்டத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணி மலை குமரன் சாலை பகுதியில் வசித்து வருபவர் செல்வி. இவர் முட்டை வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் மீன் வியாபாரி ஒருவர் தன்னைத் தாக்கியதாகக் கூறி, காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்  கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை குமரன் சாலையில் அமைந்துள்ள 150 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது ஏறி  தற்கொலை செய்யப்போவதாகக் கூறி மிரட்டல் விடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஒலிப்பெருக்கி மூலம் அவருடன் பேசி கீழே இறங்கி வரும்படி கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!