Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கள்ளச்சாராயம் விவகாரம்; 4 போலீஸ் பணியிடை நீக்கம்! – இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு!

Advertiesment
MK Stalin
, ஞாயிறு, 14 மே 2023 (13:10 IST)
விழுப்புரம் அருகே கள்ளச்சாரயம் குடித்து 3 பேர் பலியான சம்பவம் குறித்து 4 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரயம் அருந்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் நடைபெற்ற பகுதியை சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கலை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திராவிட மண்ணில் பாஜக வர முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!